உலகம்

ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்புச் சட்டத்துக்கு ஹாங்காங் கவல்துறை ஆதரவு

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்காக நிர்வாக அதிகாரி மேற்கொள்ளும் பல்வேறு பணிகளுக்கு உறுதியாக ஆதரவு அளிப்போம்.

DIN

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்காக நிர்வாக அதிகாரி மேற்கொள்ளும் பல்வேறு பணிகளுக்கு உறுதியாக ஆதரவு அளிப்போம் என ஹாங்காங் காவல்துறைத் தலைவர் தெங் பிங்ச்சியாங் ஜூலை 5ஆம் நாள் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்புச் சட்டம், ஹாங்காங் காவல்துறையின் சட்ட அமலாக்கத்துக்கு ஆதாரம் அளிக்கும் என்று தெரிவித்த அவர், எதிர்காலத்தில், இச்சட்டத்தின் நடைமுறையாக்கத்துக்கு ஹாங்காங் காவல்துறை தொடர்ந்து தலைமைத் தாங்கி, ஆதரவு அளித்து, சமூகத்தின் நிலைப்புத் தன்மையை உறுதி செய்யும் என்றும் தெரிவித்தார். 

மேலும், ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் நடைமுறையாக்கத்துக்கும், ஹாங்காங்கில் தேசியப் பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கான கமிட்டியின் உருவாக்கத்துக்கும், ஹாங்காங் காவல்துறை உறுதியாக ஆதரவு அளிப்பதாகவும்,  தொடர்புடைய சட்டம் மற்றும் நிறுவனம், ஹாங்காங் சமூகத்தின் அமைதி மற்றும் நிலைப்புத் தன்மையை உத்தரவாதம் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!

மும்பையில் புதிய மேம்பாலம்: முதல்வர் ஃபட்னவீஸ் திறந்து வைத்தார்!

நல்லகண்ணுக்கு பாரதரத்னா வழங்க வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!

முன்அனுமதியின்றி ஊடக விவாதங்களில் பங்கேற்கக் கூடாது! - தவெக

பாமக ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது என்ன? ராமதாஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT