உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 1.17 கோடியாக உயர்வு: 5,40,764 பேர் பலி

DIN

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,40,764 ஆக உயர்ந்துள்ளது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை வதைத்து வருகின்றது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. 

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை அடுத்து 3 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தநிலையில் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜூலை 7-ம் தேதி நிலவரப்படி 1,17,44,494 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 5,40,764 ஆக உள்ளது. மேலும் 57 ஆயிரம் பேர் கவலைக்கிடமாக உள்ளனர். 

அமெரிக்காவில் அதிகபட்சமாக 30,40,833 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,32,979 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 16,26,071 பேருக்கு கரோனா பாதித்து, 65 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். 

இந்தியாவில் 7,20,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20,174 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT