உலகம்

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,509 பேருக்கு கரோனா; மேலும் 176 பேர் உயிரிழப்பு

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,509 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 7,07,301 ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது. முன்னதாக அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில், இந்தியா முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களில் உள்ளன. 

இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,  ஒரேநாளில் 6,509 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 7,07,301 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 176 பேர் பலியாகியுள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 10,843 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,805 பேர் உள்பட தற்போது வரை 4,81,316 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

SCROLL FOR NEXT