உலகம்

மெக்சிகோவில் ஒரே நாளில் 7,208 பேருக்கு கரோனா: 854 பேர் பலி

UNI

மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 854 பேர் பலியாகியுள்ளனர். 

மெக்சிகோவில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 

மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,208 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டில் மொத்த பாதிப்பு 4,02,629 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோன்று, ஒரே நாளில் மேலும் 854 பேர் பலியாகியுள்ளதையடுத்து, அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44,876 ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டில் கரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையில், முதல் மூன்று இடங்களில் முறையே அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன் உள்ளதை அடுத்து, 4 ஆம் இடத்தில் மெக்சிகோ உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT