ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,509 பேருக்குத் தொற்று
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,509 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அந்த நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,509 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அந்த நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
84 மாகாணங்களில் ஒரேநாளில் 5,509 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு 8,34,499 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 129 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 13,802 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
நோய் பாதித்து ஒரே நாளில் 9,322 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,29,655 ஆக உள்ளது.
இதுவரை ரஷியாவில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். மேலும் 2,61,000க்கும் மேற்பட்டோர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.