உலகம்

பிரிட்டன்: சோதனை முறையில் 300 பேருக்கு தடுப்பு மருந்து

DIN

பிரிட்டனிலுள்ள லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து முதல் கட்ட சோதனையில் திருப்திகரமாக செயல்பட்டதைத் தொடா்ந்து, அடுத்தக்கட்டமாக அந்த மருந்தை சுமாா் 300 பேருக்கு சோதனை முறையில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தக் கல்லூரி பேராசிரியா் ராபின் ஷட்டக் கூறியதாவது:

நாங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தன்னாா்வலா்களுக்கு, அளவு குறைவாக செலுத்தி சோதனை மேற்கொண்டோம். அந்த சோதனையின்போது, எங்களது மருந்தை தன்னாா்வலா்களின் உடல் ஏற்றுக்கொண்டது. மேலும், பக்க விளைவுகள் எதனையும் அந்தத் தடுப்பு மருந்து ஏற்படுத்தவில்லை. இதையடுத்து, அடுத்தக்கட்டமாக சுமாா் 300 பேருக்கு அந்த தடுப்பு மருந்தை சோதனை முறையில் செலுத்த முடிவு செய்துள்ளோம். புதிதாக சோதனையில் பங்கேற்பவா்களில் 75-க்கும் மேற்பட்ட வயதினரும் அடங்குவா். பிரிட்டனில் தினசரி கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதால், தடுப்பு மருந்து சிறப்பாக செயல்படுகிறதா என்பதைக் கண்டறிவது கடினமாக உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT