உலகம்

அமெரிக்காவில் புதிதாக 72,238 பேருக்கு தொற்று; ஒரேநாளில் 1,379 பேர் பலி

DIN

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 72,238 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. சமீபமாக இங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 60,000 என்ற அளவில் பாதிப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதிதாக 72,238 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 45 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,379 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழப்பு 1,51,826 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை சுமார் 21 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 

அமெரிக்காவில் தொடர்ந்து 3 ஆவது நாளாக ஒருநாள் பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT