உலகம்

ஜெர்மனியில் புதிதாக 394 பேருக்கு கரோனா தொற்று

DIN

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 394 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனி 8 ஆம் இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் ஜெர்மனியில் இன்று மேலும் 394 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,82,764 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்மாக 8,581 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்நாட்டில் சுமார் 1.67 லட்சம் பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

அந்நாட்டின் தொற்று நோய்கள் குறித்த தரவுகளை அளிக்கும் ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (ஆர்.கே.ஐ) மேற்குறிப்பிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT