உலகம்

செய்தியாளர்களின் மீது அமெரிக்க அரசு தாக்குதல்

DIN

பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஜூன் 3ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஒரு வாரமாக, செய்தியாளர்களின் மீது அமெரிக்க காவற்துறையினர் பலமுறை வன்செயல்களை மேற்கொண்டு வருகின்றனர். செய்தி ஊடகங்களைச் சேர்ந்த பணியாளர்கள் சிலர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். சிலர் மோசமாக தாக்கப்பட்டுள்ளனர்.

சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஆஸ்திரேலியா, ரஷியா உள்ளிட்ட வெளிநாட்டுச் செய்தியாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க அரசு, செய்தியாளர்களை வெளிப்படையாகத் தாக்குவது, உலக அளவில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, அமெரிக்காவின் வானொலி மற்றும் தொலைக்காட்சி எண்ணியல் செய்தி சங்கத்தின் முதன்மை இயக்குநர் டான் ஷெல்லி கூறுகையில், செய்தியாளர்களை மட்டுமல்ல, பொது மக்களையும் இது புண்படுத்தியுள்ளது என்றார். மேலும், ஐ.நா பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறுகையில், செய்தியாளர்கள் தாக்கப்படும் போது, முழு சமூகமும் இதற்குப் பதில் விலை கொடுக்க வேண்டும் என்றார். 

உண்மையில், அமெரிக்காவின் நடப்பு அரசு, செய்தி ஊடகங்களுக்கு அடிக்கடி நிர்ப்பந்தம் அளித்து வருகிறது. கரோனா வைரஸ் பரவிய பிறகு தற்போதுவரை, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதலளித்த போது, அமெரிக்க அரசியல்வாதிகள், பொய் கூற்றை உருவாக்கி, பொறுப்புகளைத் தட்டிக்கழித்து, செய்தியாளர்களை வசைபாடி வருகின்றனர். செய்தி ஊடகங்கள் மற்றும் மனச்சாட்சி கொண்ட பொது மக்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், ஆள்வதில் உள்ள திறமையின்மையை அவர்கள் மூடி மறைத்து வருகின்றனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT