உலகம்

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 4,13,702 ஆக உயர்வு!

DIN

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4,13,702 ஆக உயர்ந்துள்ளது.  

கடந்த வருடம் டிசம்பரில் சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. உலகளவில் லட்சக்கணக்கான மக்கள் கரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளனர். உயிரிழப்புகள் மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலும் கரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் தற்போது வரை கரோனா வைரஸால் பாதித்தோரின் எண்ணிக்கை 73,23,185 ஆக உள்ளது. இதுவரை 4,13,702 பேர் பலியாகியுள்ளனர். 36,03,995 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 54,026 பேரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

உலகிலேயே கரோனா வைரஸால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. அங்குப் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2,045,549ஆக இருக்கிறது. வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 1,14,148ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 7,42,084 பேரும், அதற்கு அடுத்த இடத்தில் ரஷ்யாவில் 4,85,253 பேரும்  பாதிப்படைந்துள்ளனர். 

இந்த பட்டியலில் இந்தியா தற்போது 6வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் இதுவரை 275,413 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

SCROLL FOR NEXT