உலகம்

பாகிஸ்தானில் புதிதாக 4,443 பேருக்கு கரோனா பாதிப்பு; மேலும் 111 பேர் பலி

DIN

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,443 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,48,919 ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது: 

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,443 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,48,919 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 111 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு 2,839 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று இதுவரை 56,390 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மொத்த பாதிப்பில் பஞ்சாபில் 55,878, சிந்து - 55,581, கைபர்-பக்துன்க்வா- 18,472, பலுசிஸ்தான்- 8,327, இஸ்லாமாபாத் - 8,857, கில்கித்-பல்திஸ்தான்- 1,143 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 663 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 25,015 பரிசோதனைகள் உள்பட இதுவரை 9,22,665 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

SCROLL FOR NEXT