ரஷியாவில் புதிதாக 7,889 பேருக்கு கரோனா: 32 சதவிகிதத்தினருக்கு அறிகுறி இல்லை
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,889 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,889 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக ரஷியா 3-வது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 7,889 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 2,579 (32.7 சதவிகிதத்தினர்) பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,76,952 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 161 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 8,002 ஆக உயர்ந்துள்ளது. இதுவே நேற்று 181 பேர் பலியாகியிருந்தனர்.
Advertisement
அதேசமயம், 10,186 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நேற்று 10,443 பேர் குணமடைந்திருந்தனர். இதுவரை மொத்தம் 3,34,592 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.