ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக ஆதரிப்பதாக ஹாங்காங்கின் பல்வேறு துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி, ஹாங்காங்கின் சட்டமியற்றல் குழு உறுப்பினரான லியாங் மெய் ஃபென் கூறுகையில்,
இச்சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஹாங்காங் சமூகத்தின் பெரும்பாலானோர் ஆவலோடு எதிர்ப்பார்க்கின்றனர். ஹாங்காங்கிற்கு அமைதியான வன்முறையில்லாத சமூகச்சூழ்நிலை தேவைப்படுகிறது. ஹாங்காங் ஒருபோதும் தேசியப் பாதுகாப்புக்குப் புறம்பான பகுதியாக இருக்க முடியாது என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சீனாவிலிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாக விளங்கும் ஹாங்காங்கைப் பிரிவினைவாதிகள் மற்றும் சமூக ஒழுங்கை சீர்குலைக்கும் தளமாக மாற்றக் கூடாது. எந்தச் சூழலிலும் ஹாங்காங்கில் பயங்கரவாதம் அனுமதிக்கப்படாது என்று ஹாங்காங் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.