உலகம்

ஜெர்மனியில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு; கடந்த 24 மணி நேரத்தில் 587 பேருக்கு தொற்று

DIN

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 587 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 1,91,449 ஆக அதிகரித்துள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. தற்போது உலக நாடுகள் மத்தியில் 11 ஆம் இடத்தில் இருக்கும் ஜெர்மனியில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 587 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,91,449 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 16 பேர் உயிரிழந்ததை அடுத்து, மொத்தமாக 8,914 ஆக அதிகரித்துள்ளது. அங்கு சுமார் 1.75 லட்சம் பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

அந்நாட்டின் தொற்று நோய்கள் குறித்த தரவுகளை அளிக்கும் ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (ஆர்.கே.ஐ) மேற்குறிப்பிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது.

ஜெர்மனியில் கடந்த வாரம் ஒருநாள் பாதிப்பு சராசரியாக 300 என்ற அளவில் குறைந்த நிலையில் தற்போது பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. 

கடந்த 12 ஆம் தேதி மிகவும் குறைவாக ஒருநாளில் 258 பேருக்கு தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிகை 10ஆக உயர்வு

ராகுலுக்கும், மோடிக்கும்தான் நேரடிப் போட்டி: அமித் ஷா

பனிச்சாரல்! ஸ்ரீமுகி..

டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் அசத்துவார்: குமார் சங்ககாரா

SCROLL FOR NEXT