உலகம்

செக் குடியரசு: திடீரென அதிகரிக்கும் கரோனா பரவல்

DIN

மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசில் கரோனா பரவல் திடீரென தீவிரமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அந்த நாட்டின் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை சனிக்கிழமை 260-ஆக இருந்தது. முந்தைய நாள் 168 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருந்தது கண்டறியப்பட்ட நிலையில், மறு நாளே அந்த எண்ணிக்கை 260-ஆக அதிகரித்தது அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதிக்குப் பிறகு அந்த நாட்டின் அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு இதுவாகும். இதுவரை அந்த நாட்டில் 11,306 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT