உலகம்

பெய்ஜிங்கில் நியூக்ளிக் அமில சோதனை பணி

DIN

ஜூன் 28ஆம் நாள் 12 மணிக்கு வரை, பெய்ஜிங் மாநகரில் 82 லட்சத்து 99 ஆயிரம் பேரிடம் நியூக்ளிக் அமில சோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

இவர்களில் 76 லட்சத்து 87 ஆயிரம் பேரின் சோதனை முடிவுகள் பெறப்பட்டுள்ளன. நியூக்ளிக் அமில சோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்களைச் சோதிக்கும் பணி அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொவைட்-19 நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பற்றி பெய்ஜிங் மாநகர அரசு 28ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவல் வெளியிடப்பட்டது.

நடைமுறை நிலைமைக்கிணங்க பெய்ஜிங்கில் நியூக்ளிக் அமில சோதனை 4 தொகுதிகளாகக் குறிப்பிட்ட மக்களிடையில் மேற்கொள்ளப்பட்டது. மேலும், அரசு சார் மருத்துவமனைகளில் இச்சோதனையின் கட்டணம் 180 யுவானிலிருந்து 120 யுவானாக குறைக்கப்பட்டுள்ளது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT