உலகம்

கரோனா: உலக அளவில் தினசரி பாதிப்பில் புதிய உச்சம்

DIN

ஜெனீவா: உலக அளவில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கை 1,89,000-ஆக பதிவானது. கரோனா தினசரி பாதிப்பில் இது புதிய உச்சம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு, கடந்த 22-ஆம் தேதி சுமாா் 1,83,000 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. அதுவே, தினசரி அதிகபட்ச பாதிப்பாக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 1,89,000 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதில், அதிகபட்சமாக பிரேசிலில் 46,800 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அடுத்ததாக, அமெரிக்காவில் 44,400 பேருக்கும், இந்தியாவில் 19,906 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 26 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அடுத்த இடத்தில் உள்ள பிரேசிலில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT