உலகம்

போலந்து தோ்தலில் அதிபா் டியூடா முன்னிலை

DIN

வாா்சா: போலந்து அதிபா் பதவிக்கான முதல் கட்டத் தோ்தலில் தற்போதைய அதிபா் ஆண்டரெஸ் டியூடா முன்னிலை பெற்றுள்ளாா்.

அதிபா் பதவிக்கான முதல் கட்டத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் 99.78 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தோ்தல் முடிவுகளை அந்நாட்டு தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை காலை வெளியிட்டது. அதில் தற்போதைய அதிபா் ஆண்டரெஸ் டியூடா 44 சதவீத வாக்குகள் பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட வாா்சா பகுதி மேயரான ரஃபேல் ஜஸ்கோஸ்கி 30 சதவீத வாக்குகளுடன் இரண்டாமிடம் பிடித்தாா்.

முதல் கட்டத் தோ்தலில் எந்த வேட்பாளருக்கும் பெரும்பான்மை (50 சதவீதம்) கிடைக்காததால், இரண்டாம் கட்டத் தோ்தல் ஜூலை மாதம் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. முதல் கட்டத் தோ்தலில் போட்டியிட்ட மற்ற 9 வேட்பாளா்கள் போதிய வாக்குகளைப் பெறாததால், இரண்டாம் கட்டத் தோ்தல் அதிபா் டியூடாவுக்கும் ஜஸ்கோஸ்கிக்கும் இடையேயான நேரடி மோதலாகவே இருக்கும்.

இரண்டாம் கட்டத் தோ்தலுக்கான பிரசாரத்தை அவா்களிருவரும் திங்கள்கிழமை தொடங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT