உலகம்

ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சருக்கு கரோனா வைரஸ்

DIN

ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டுட்டனுக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டுட்டன், தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது,

அதிகாலை தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தபோது காய்ச்சலும், தொண்டை வறட்சியும் இருப்பதை உணர்ந்தேன். இதையடுத்து குயின்ஸ்லாந்து சுகாதாரத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன். எனவே எனக்கு கரோனா வைரஸ் (கொவைட்-19) பரிசோதனை நடத்தப்பட்டது. 

அதில் எனக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. எனவே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். தற்போது உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் அடுத்தகட்ட நிலை குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT