உலகம்

உலகம் முழுவதும் ஒற்றுமையாக வைரஸை எதிர்த்து போராட்டம்

DIN

ஒரு நாளில், ஐரோப்பாவும் அமெரிக்காவும் கொவைட்-19 நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பன்முகங்களிலும் தீவிரமாக்கியுள்ளன.

அமெரிக்கா தேசிய அவசர நிலையில் இருப்பதாக அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் உள்ளூர் நேரப்படி 13ஆம் நாள் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கொவைட்-19 நோய் பரவல் நிலவரம் பற்றிய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும், செக், ஸ்பெயின், போலந்து முதலிய நாடுகளும் பொது சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளன. இந்நோய் உலகளவில் பரவ தொடங்கியதும், வைரஸுக்கு எதிரான போராட்டம் உலக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது.

தொடர்புடைய நாடுகளுடன் இந்நோய் பரவலைத் தடுக்கும் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு, மருந்து மற்றும் தடுப்பூசிக்கான கூட்டு ஆய்வை மேற்கொள்ள சீனா விரும்புகிறது. நோய் பரவிய சில நாடுகளுக்கு சீனா இயன்ற அளவில் உதவி செய்துள்ளது என்று 12ஆம் நாளிரவு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரேஸுடன் தொடர்பு கொண்ட போது தெரிவித்தார்.

நோய்க்கு நாடு எல்லை இல்லை. உலக நோய் கட்டுப்பாட்டுப் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டுமானால், சர்வதேச சமூகத்தின் கூட்டு முயற்சி வேண்டும்.

நோய் முழு உலக மனிதருக்கும் கூட்டு எதிரியாகும். ஒற்றுமை, ஒரே தேர்வாகும். கொள்கை ஒருங்கிணைப்பு, நிதி ஆதரவு, தகவல் வெளியீடு, அறிவியல் ஆய்வு, தடுப்பு வழிமுறைப் பரிமாற்றம் முதலியவற்றில் பயனுள்ள நடவடிக்கைகளை எவ்வளவு வெகுவிரைவில் செயல்படுத்தினால், நோய் பரவல் போக்கை அவ்வளவு வெகுவிரைவில் கட்டுப்படுத்த முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT