முகப்பு
உலகம்

கரோனா வைரஸ் பரவல்: இலங்கையில் 3 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் 3 நாட்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உலகம்

கரோனா வைரஸ் பரவல்: இலங்கையில் 3 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் 3 நாட்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:12 PM
பகிர்:

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் 3 நாட்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5,000க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவில் 115 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் இந்தியாவின் அண்டை நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இலங்கையில் இந்த வைரஸுக்கு இதுவரை 21 பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் கரோனா வரைஸ் தடுப்பு நடவடிக்கையாக இலங்கையில் 3 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப்பணிகள் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு  வரும் 19 ஆம் தேதி வரை  பொது விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபட்ச அறிவித்துள்ளார். 

முன்னதாக கரோனா வைரஸ் சூழலை எதிா்கொள்வதற்காக, சாா்க் கூட்டமைப்பு நாடுகள் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காணொலி முறையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பிரதமா் மோடி, இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச, மாலத்தீவு அதிபா் இப்ராஹிம் முகமது சோலி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
முழு கட்டுரையைப் படிக்க →