உலகம்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா

DIN

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் 180 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. மேலும் நாளுக்கு நாள் பலியானோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகின்றது. இதனால் உலக நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளன. இந்த நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

போரிஸ் ஜான்சனுக்கு லேசான அறிகுறி இருந்த நிலையில் பரிசோதனை செய்ததில் தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா உறுதியானதால் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும், காணொலி மூலம் அரசு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்காக்கிற்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு பணிகளைச் செய்து வருவதாக பிரிட்டன் அமைச்சர் மேட் ஹேன்காக் டிவிட்டரில் தகவல் வெளியட்டுள்ளார். பிரிட்டன் இளவரசர் சார்லஸ்-க்கு ஏற்கெனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT