உலகம்

பாகிஸ்தான் விமானப் படைக்கு முதல்முறையாக இந்து விமானி தேர்வு

பாகிஸ்தானில் முதல்முறையாக விமானப் படைக்கு ஒரு இந்து விமானியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ANI

லாகூர்: பாகிஸ்தானில் முதல்முறையாக விமானப் படைக்கு ஒரு இந்து விமானியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தார்பார்கார் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் தேவ் என்ற இளைஞர் பாகிஸ்தானின் முதல் இந்து விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

பாகிஸ்தானின் அனைத்து இந்து பஞ்சாயத்துச் செயலாளர் ரவி தவானி கூறுகையில், 

முதன் முறையாக பாகிஸ்தான் விமானப் படைக்கு ராகுல் தேவ் விமானியாக தேர்வு செய்யப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், இந்து சமூகத்தைச் சேர்ந்த பலர் சிவில் சேவை, இராணுவம் மற்றும் மருத்துவத்துறையிலும் பணியாற்றி வருகின்றனர். 

பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான மத பாகுபாடு பற்றிய அறிக்கைகளுக்கு மத்தியில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டில், பாகிஸ்தானைச் சேர்ந்த சீக்கிய ரேஞ்சர் அமர்ஜீத் சிங்,  முதல் முறையாக வாகா எல்லையில் நடந்த பாரம்பரிய விழாவில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT