உலகம்

ஜெர்மனியில் மேலும் 357 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,69,575 ஆக அதிகரித்தது

DIN

ஜெர்மனியில் மேலும் 357 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, அங்கு மொத்த பாதிப்பு 1,69,575 ஆக அதிகரித்துள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. தொடர்ந்து, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகளும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. 

அதேபோன்று ஜெர்மனியிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு ஒரேநாளில் மேலும் 357 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,69,575 ஐ எட்டியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 22 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 7,417 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அந்நாட்டில் சுமார் 1.40 லட்சம் பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

அந்நாட்டின் தொற்று நோய்கள் குறித்த தரவுகளை அளிக்கும் ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (ஆர்.கே.ஐ) இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. 

உலகில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஏழாவது நாடாக ஜெர்மனி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT