உலகம்

அமெரிக்க அரசியலாளர்களால் மனிதருக்கு ஏற்பட்ட நெருக்கடி

DIN

அமெரிக்காவில் இப்போது யாராவது, சீனா மீது அவதூறு கூறாமல், உண்மைகளைப் பேசினால், அவர்கள் மிக கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று சீனாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் போகாஸ் சி என் என் என்ற செய்தி ஊடகத்திற்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.

இப்போது அமெரிக்காவில் 13 இலட்சத்து 50 ஆயிரம் பேர் புதிய ரக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 80 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அதேவேளை, ஏப்ரல் திங்களில் அமெரிக்காவில் விவசாய துறையைத் தவிர்த்து 2 கோடியே 5 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகாலத்தில் அதிகரித்த வேலை வாய்ப்புகள், ஒரு திங்கள் காலத்தில் இழந்துள்ளன. கடந்த நூற்றாண்டில் கண்டிராத பொருளாதார நெருக்கடியை அமெரிக்கா சந்திக்கின்றது என்று வாஷிங்டன் போஸ்ட் என்ற செய்தி தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டனின் சாம்ராஜிய கழகத்தின் தொற்று நோய் பிரிவின் ஆய்வாளர் ப்ரிதா ஜெவெல் நியூயார்க் டைம்ஸ் என்ற செய்தி தாளில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இக்கட்டுரையில் அவர் கூறுகையில், மார்ச் 16ஆம் நாளில், அமெரிக்க அரசு மேற்கொண்ட தனிமைப்படுத்திய நடவடிக்கை, மார்ச் 2ஆம் நாளில் நடத்தியிருந்தால், அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 விழுக்காடு குறைந்திருக்கும். மார்ச் 9ஆம் நாளில் நடத்தியிருந்தால், இவ்வெண்ணிக்கை 60 விழுக்காடாக குறைந்திருக்கும் என்றார் அவர்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT