உலகம்

டிரம்பின் அலட்சியச் செயலால் பரவி வரும் பகைமை

அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் மார்ச் 16ஆம் நாள் சமூக ஊடகத்தில் முதன்முறையாக கரோனா

DIN

அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் மார்ச் 16ஆம் நாள் சமூக ஊடகத்தில் முதன்முறையாக கரோனா வைரஸை“சீன வைரஸ்”என அழைத்ததை அடுத்து, உலகளவில் ஆசிய வம்சாவழியினர் மீதான இனவெறி பாகுபாடும் தாக்குதல்களும் தீவிரமாக அதிகரித்து வருகின்றன. மார்ச் திங்கள் மட்டும் சமூக ஊடகம் வழியாக அவர்கள் மீது தெரிவிக்கப்பட்ட பகைமை கருத்துகளின் எண்ணிக்கை 900 விழுக்காடு அதிகரித்துள்ளது என ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டது.

டிரம்பின் கூற்று, சீனாவுக்கு எதிரான பிரிட்டனின் வலது சாரி சக்திக்கு ஊக்கமளித்துள்ளது என்று பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் பல கருத்து தெரிவித்தன. லண்டனில் வசித்து வரும் ஜப்பான், சிங்கப்பூர், தென்கொரியா முதலிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்  அண்மையில் அடிக்கடி காரணமில்லாத தாக்குதலுக்குள்ளாகினர்.

உலகின் மிகப் பெரிய ஒரு நாட்டுத் தலைவரின் பொற்றுப்பற்ற கருத்து, மற்றவர்களுக்கு உயிரிழப்பைக் கூட ஏற்படுத்தக் கூடும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நடைமுறைத் தாக்குதல் மற்றும் இனவெறி பாகுபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT