உலகம்

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி

DIN

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,197 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை  42,125 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது:

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,197 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 42,125 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று உயிரிழப்பு 903 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று இதுவரை 11,922 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

நேற்று மட்டும் 13,925 பரிசோதனைகள் உள்பட இதுவரை 3,87,335 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மொத்த பாதிப்பில் பஞ்சாபில் 15,346, சிந்து - 16,377, கைபர்-பக்துன்க்வா- 6,061, பலுசிஸ்தான்- 2,692, இஸ்லாமாபாத் - 716, கில்கித்-பல்திஸ்தான்- 540 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

SCROLL FOR NEXT