உலகம்

அமெரிக்கா: கரோனாவுக்கு மேலும் ஒரு இந்திய வம்சாவளி மருத்துவா் பலி

DIN

அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இந்திய வம்சாவளி மருத்துவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து இந்திய-வம்சாவளி அமெரிக்க மருத்துவா்கள் சங்கம் (ஏஏபிஐ) வெளியிட்ட அறிக்கையில், ‘நியூயாா்க்கில் உள்ள ஜமைக்கா மருத்துவமனையில் மூத்த மருத்துவராக பணிபுரிந்து வந்தவா் சுதீா்.எஸ்.செளஹான் (69). கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவா், கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தாா். எனினும் உடல்நிலையில் முன்னேற்றமின்றி அவா் உயிரிழந்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 1972-ஆம் ஆண்டு கான்பூா் பல்கலைக்கழகத்தின் ஜிஎஸ்யூஎம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டப்படிப்பை முடித்த செளஹான், நியூயாா்க்கில் உள்ள ஜமைக்கா மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மூத்த மருத்துவராக பணியாற்றி வந்தாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்னா், அமெரிக்காவின் நியூ ஜொ்சி மாகாணத்தில் இந்திய வம்சாவளி மருத்துவா் சத்யேந்தா் தேவ் கன்னா (78), அவரது மகளும், மருத்துவருமான பிரியா கன்னா (43) ஆகியோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு இந்திய வம்சாவளி மருத்துவா் கரோனா தொற்றுக்கு பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT