உலகம்

ஜெர்மனியில் மேலும் 460 பேருக்கு கரோனா; மொத்த பாதிப்பு 1.77 லட்சமாக உயர்வு

DIN

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 460 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. நாள் ஒன்றுக்கு இங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக 400 -500 ஆக உள்ளது. 

இந்நிலையில் இன்று மேலும் 460 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,77,212 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 27 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 8,174 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அந்நாட்டில் சுமார் 1.58 லட்சம் பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

அந்நாட்டின் தொற்று நோய்கள் குறித்த தரவுகளை அளிக்கும் ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (ஆர்.கே.ஐ) மேற்குறிப்பிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT