உலகம்

கொவைட்-19 விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்க அரசியல்வாதிகள்

DIN

உண்மை, சட்டம், சர்வதேச வழக்கம் போன்ற எந்த ஆதாரமும் இல்லாமல், தவறான முறையில் குற்றம் சுமத்துவதை சீனா எதிர்ப்பதாக, சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 24ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங்கில் தெரிவித்தார்.  ஆனால், நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணி தோல்வியால் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் வகையில், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாட்டு அரசியல்வாதிகள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.

தற்போது, பன்னாட்டு மருத்துவத் துறை மற்றும் அறிவியல் துறை ஆகியவை, கொவைட்-19 நோயை ஏற்படுத்தும் வைரஸ் எவ்வாறு தோன்றியது குறித்து முடிவு செய்யவில்லை. அதேசமயம், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், கடந்த ஆண்டு நவம்பர் திங்கள் அல்லது இதற்கு முந்தைய காலத்தில் கொவைட்-19 தொற்று ஏற்பட்டது. அந்த நோயாளிகள், வெளிநாட்டில் பயணம் மேற்கொள்ளவில்லை. சந்தேகத்துக்குள்ளான அமெரிக்கா, பல துறைகளில் கொவைட்-19 விவகாரத்தில்  தகவல்களைத் தெளிவுபடுத்தவில்லை.

உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள ஃபோர்ட் டெட்ரிக் என்ற அமெரிக்க ஆய்வகத்தின் உண்மை நிலை பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அமெரிக்க அரசியல்வாதிகள் மறைந்திருப்பது என்ன? இந்த விவகாரங்களில், சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டாமா?

2009ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கிய எச்1என்1 ரக காய்ச்சல், உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதனால், உலகளவில் மாபெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதுவரை, எந்த நாடோ அல்லது அமைப்போ, அமெரிக்கா மீது குற்றம் சுமத்தி இழப்பீடு கோரவில்லை. இதனால், சீனா மீது வழக்கு தொடுத்து வருவதாக சொல்லும் அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர், இரட்டை நிலைப்பாட்டையும் ஆதிக்கத்தையும் மீண்டும் வெளிக்காட்டுகின்றனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

SCROLL FOR NEXT