உலகம்

கரோனா: ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரம் பேர் பாதிப்பு

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,946 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 3,53,427 ஆக அதிகரித்துள்ளது. 

ரஷியாவில் நாள் ஒன்றுக்கு கரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக 10 ஆயிரத்துக்குக் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது. எனினும், உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா மற்றும் பிரேசிலைத் தொடர்ந்து, ரஷியா 3 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,946 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 3,53,427 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 92 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ரஷியாவில் இதுவரை கரோனாவுக்கு 3,633 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 1,18,798 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

SCROLL FOR NEXT