ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரசேத்தில் தேசிய பாதுகாப்புக்கான சட்ட விதிகளை உருவாக்கி முழுமைப்படுத்துவது பற்றிய அம்சம், சீனாவின் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து, மைக் பாம்பியோ உள்ளிட்ட அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர், ‘ஹாங்காங்கில் உயர்நிலை தன்னாட்சி இருக்காது’ என்று அவதூறு பரப்பி வருவதோடு, சீனா மீது தடை விதிக்கப் போவதாகவும் அச்சுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க அரசியல்வாதிகள் அவர்களின் நாடகமானது, ஹாங்காங்கின் நல்ல எதிர்காலத்திற்குப் பொருத்தமற்றது. ஹாங்காங்கில் கலவரத்தை ஏற்படுத்தி, சீன வளர்ச்சியை தடுப்பது தான் அவர்களுடைய உள்நோக்கம்.
தேசிய பாதுகாப்புக்கு கடும் தீங்கு விளைவிக்கும் சில செயல்களை தடுக்க வேண்டும் என்றே சீனாவின் தேசிய மக்கள் பேரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஹாங்காங்கில் மேலும் முழுமையான சட்ட அமைப்புமுறை உருவாக்கப்படும். அங்கு, மேலும் நிலையான சமூக ஒழுங்கும், சீரான சட்ட ஒழுங்கும், தொழில் புரிவதற்கான நல்ல சூழலும் கொண்டு வரப்படும். அங்கு உலக நாடுகளின் நிறுவனங்களுக்கு நல்ல வளர்ச்சி வாய்ப்பு கிடைக்கும்.
ஆனால், இந்த எதிர்கால நன்மைகளை உருவாக்குவதற்கு மாறாக, அமெரிக்கா எப்போது ஹாங்காங்கை முக்கிய தளமாகக் கொண்டு, ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் அரசியல் தலையீடு செய்து வருகின்றது., இந்த பாதுகாப்புச் சட்ட வரைவு கொண்டு வரப்பட்ட பின், அவர்கள் ஹாங்காங் விவகாரத்தில் தலையிட முடியாது என்பதால், அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. ஹாங்காங் விவகாரத்தின் மூலம் சீன வளர்ச்சியைத் தடை செய்வதற்கான கனவுகள் அகற்றப்படும்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.