உலகம்

நேபாளத்தில் கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியது! நேற்று மட்டும் 156 பேருக்கு தொற்று உறுதி

DIN

நேபாளத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

இன்று பிற்பகல் நிலவரப்படி கரோனா தொற்றால் 1,042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 156 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 187 பேர் குணமடைந்துள்ளனர். 

இதில் 940 பேர் ஆண்கள்; 102 பேர் பெண்கள். மேலும் அங்குள்ள 77 மாவட்டங்களில் 47 மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிப்பு உள்ளது. 

சுகாதாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் பிகாஸ் தேவ்கோட்டா இத்தகவலை வெளியிட்டுள்ளார். 

நோய் பரவலைத் தடுப்பதற்காக நேபாளத்தில் அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் ஜூன் 2-ஆம் வரை நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT