கோப்புப்படம் 
உலகம்

உலகளவில் கரோனா பலி 12 லட்சத்தைக் கடந்தது!

உலகளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.63 கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவால் 3.34 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

DIN

உலகளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.63 கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவால் 3.34 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, உலகளவில் 4,63,94,211 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 3,34,87,910 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 12,00,405 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் தற்போது 1,17,05,896 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 84,250 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 94,02,590 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,36,072 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. அங்கு பாதிப்பு 81,84,082 ஆகவும் 1,22,149 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாம் இடத்தில் பிரேசிலும் மற்றும் நான்காம் இடத்தில் ரஷியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT