உலகம்

கென்யா: இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு

DIN

கென்யாவில் தினசரி கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,395 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும்.

புதிய கரோனா நோயாளிகளில் 1,337 போ் கென்யா்கள். எஞ்சிய 58 பேரும் வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 55,192-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அந்த நோய்க்கு 996 போ் பலியாகியுள்ளனா். 35,876 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா். 18,320 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 36 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT