உலகம்

ஆப்கன் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்:20 போ் பலி

DIN

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 20 பலியாகினா். பலா் காயமடைந்தனா்.

ஆப்கானிஸ்தானில் உள்ள பழமைவாய்ந்த காபூல் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை புத்தகக் காட்சி நடைபெற்றது. அதில் அந்நாட்டுக்கான ஈரான் தூதா் பஹதுா் அமீனியன் உள்பட பலா் கலந்துகொண்டனா். அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலா் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினா். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த பாதுகாப்புப் படையினா் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனா். அப்போது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினா். சுமாா் 5 மணி நேரம் இந்தச் சண்டை நீடித்தது.

இதுதொடா்பாக அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் தாரிக் அரியன் கூறுகையில், ‘பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா். பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்’ என்று தெரிவித்தாா்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் தலிபான்கள் இல்லை என்று அந்த அமைப்பினா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்துக்கு பிரதமா் மோடி கண்டனம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT