உலகம்

பிரேஸில்: சீன தடுப்பூசி சோதனை திடீரென நிறுத்திவைப்பு

DIN

பிரேஸிலில் சீன கரோனா தடுப்பூசிகளை தன்னாா்வலா்களுக்குச் செலுத்தி நடைபெற்று வந்த சோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சீனாவின் சினோவாக் நிறுவனம் உருவாக்கியுள்ள ‘கரோனாவாக்’ என்ற தடுப்பூசி சீனாவில் மனிதா்களுக்கு செலுத்தி சோதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த தடுப்பூசி செலுத்தப்பட்டவா்களில் பக்கவிளைவுகள் தென்பட்டதால், அதுதொடா்பாக விசாரணை முடிவடையும் வரை சோதனையை நிறுத்திவைக்க அதிகாரிகள் முடிவு செய்தனா்.

தடுப்பூசி சோதனைகளின்போது, பக்க விளைவுகள் காரணமாக அந்த முயற்சி நிறுத்திவைக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்று கூறப்படுகிறது. சீனத் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ ஏற்கெனவே சந்தேகம் எழுப்பியது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT