ரஷியாவில் புதிதாக 21,608 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 439 பேர் பலி
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,608 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,608 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த மாதம் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,608 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 18,58,568 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 439 பேர் உள்பட இதுவரை 32,032 பேர் உயிரிழந்துள்ளனர்.
Advertisement
அதேநேரத்தில் தற்போதுவரை 13,88,168 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 4,38,368 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 5,997 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.