முகப்பு
உலகம்

ரஷியாவில் புதிய உச்சம்: ஒரேநாளில் 22,778 பேருக்கு கரோனா

ரஷியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 22,778 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 16 நவம்பர், 2020 at 6:25 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:23 PM


ரஷியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 22,778 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 22,572 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய (திங்கள்கிழமை) பாதிப்பு எண்ணிக்கை கூடியுள்ளது.

முன்னதாக கடந்த சனிக்கிழமை 22,702 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதே ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கையின் உச்சமாக இருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 22,778 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,48,603 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,640 பேருக்கு (24.8 சதவிகிதம்) எவ்வித அறிகுறியும் தென்படவில்லை.

Advertisement

நேற்று 352 பேர் நோய்த் தொற்றால் பலியான நிலையில், இன்று 303 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 33,489 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 13,864 பேர் நோய்த் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். நேற்றைய தினத்தைக் காட்டிலும் (14,456) இது குறைவான எண்ணிக்கை. இதுவரை மொத்தம் 14,53,849 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.