உலகம்

ஆப்கன், இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறைக்க முடிவு

DIN

ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவெடுத்துள்ளதாக அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் நிலவும் உள்நாட்டு பதற்றம் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக அமெரிக்கப் படைகள் அங்கு பணியாற்றி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு பிற நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதனைத் தொடர்ந்து தனது அதிபர் பதவியின் இறுதி காலத்தில் உள்ள டிரம்ப் ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டோபர் மில்லர் வெளியிட்டார்.

அதன்படி அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும் திட்டம், ஆப்கானிஸ்தானில் உள்ள படைகளின் எண்ணிக்கையை 4,500 லிருந்து 2,500 ஆகவும், இராக்கில் உள்ள படைகளின் எண்ணிக்கையை 3,000 யிலிருந்து 2,500 ஆகவும் குறைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கை அமலுக்கு வரும் என மில்லர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

ஆடை சுதந்திரம் கோரியது குற்றமா? செளதியில் பெண்ணுரிமைப் போராளிக்குச் சிறை: அமைப்புகள் கண்டனம்!

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT