உலகம்

பாகிஸ்தானில் மேலும் 2,665 பேருக்கு கரோனா பாதிப்பு; 59 பேர் பலி

DIN

பாகிஸ்தானில் புதிதாக 2,665 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும் 59 பேர் பலியாகியுள்ளனர். 

பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,665 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.

இதனால், மொத்த பாதிப்பு 374,173 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாட்டில் கரோனா தொற்றுக்கு 21 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 7,669 ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 329,828 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 36,683 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 653 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். 

மாகாணவாரியாக பாதிப்பு எண்ணிக்கை:

சிந்து - 162,221, பஞ்சாப் - 114,010, கைபர்-பக்துன்க்வா- 44097, இஸ்லாமாபாத் - 26,569, பலுசிஸ்தான்- 16,744, கில்கித்-பல்திஸ்தான்- 4,526 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்- 6,000 பேர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT