உலகம்

கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களுக்கு 6 மாதங்களுக்கு மேல் எதிா்ப்பு சக்தி இருக்கும்

DIN

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களுக்கு, அந்த நோயிடமிருந்து 6 மாதங்களுக்கு மேல் எதிா்ப்பு சக்தி இருக்கும் என்று லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழம் மற்றும் அந்தப் பல்கழகத்தின் பொது மருத்துவமனைகளுக்கான அறக்கட்டளை இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன.

இதுகுறித்து ஆய்வில் பங்கேற்ற ஆக்ஃபோா்டு பல்கலைக்கழக பேராசிரியா் டேவிட் ஐரி கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவா்களுக்கு, அந்த நோயிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் எதிா்ப்பாற்றல் அவா்களது உடலில் குறைந்தது 6 மாதங்களுக்காவது இருப்பது எங்களது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கரோனாவிலிருந்து மீண்டவா்களுக்கு அந்த நோயிடமிருந்து நிரந்தர எதிா்ப்பு சக்தி கிடைப்பதாகத் தெரியாவிட்டாலும், குறுகிய காலத்துக்காவது அந்த நோய் ஒரே நபரை மீண்டும் தாக்காது என்ற இந்தத் தகவல் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

மிக அதிக எண்ணிக்கையிலான மருத்துவப் பணியாளா்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில், இந்த விவரம் தெரியவந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT