முகப்பு
உலகம்

ரஷியாவில் 25 ஆயிரத்தைத் தாண்டிய ஒருநாள் கரோனா பாதிப்பு

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,173 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 23 நவம்பர், 2020 at 6:27 PM
கோப்புப் படம்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:26 PM

ரஷியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அந்த நாட்டில் 25,173 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த சில வாரங்களில் பதிவான ஒருநாள் பாதிப்பில் அதிகபட்சமாகும். 

இதையடுத்து மொத்த பாதிப்பு 21,14,502 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 361 பேர் உள்பட இதுவரை 36,540 பேர் உயிரிழந்துள்ளனர்

அதேநேரத்தில் தற்போதுவரை 16,11,445 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 4,66,517 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்நாட்டு சுகாதாரத் துறை மேற்குறிப்பிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.