முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 3000 பேருக்கு பாதிப்பு

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 26 நவம்பர், 2020 at 6:08 PM
கோப்புப் படம்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:28 PM

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
அண்டை நாடான பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் தொற்று பாதிப்பை திறன்பட கையாண்ட பாகிஸ்தான் தற்போது திணறி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 3,009 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இது ஜூலை மாதத்துக்கு பிறகு ஒருநாளில் பதிவான அதிக பாதிப்பாகும். இதையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,82,892ஆக உயர்ந்துள்ளது. 
அதில் அதிகபட்சமாக பஞ்சாப் மாகாணத்தில் 1,16,506 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 59 பேர் பலியானார்கள். இதன்மூலம் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7,803ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.