கடந்த 24 மணி நேரத்தில் 2,000 அமெரிக்கர்கள் கரோனாவுக்கு பலி
அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,60,000-ஐ தாண்டியுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக அந்த நாட்டின் தினசரி கரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது,
Advertisement
தினமும் லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 1,31,38,204 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2.046 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2,60,322 ஆக உயர்ந்துள்ளது.
நோயிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 78,05,597 ஆக அதிகரித்துள்ளது. 5,06,4,386 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 24,150 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.