உலகம்

ரஷியாவில் மீண்டும் 10 ஆயிரத்தைக் கடந்தது ஒருநாள் பாதிப்பு!

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,888 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும், 117 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் புதிதாக 10,888 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. 

இதையடுத்து, மொத்த பாதிப்பு 12,25,889 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 117 பேர் உள்பட இதுவரை 21,475 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதேநேரத்தில் தற்போது வரை 982,324 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,181 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 2,22,090 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 3,537 பேர் உள்பட 3,07,477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ரஷியாவில் கடந்த மாதம், ஒருநாள் கரோனா பாதிப்பு சராசரியாக 5,000 என்ற அளவில் குறைந்த நிலையில், சமீப தினங்களில் தொடர்ந்து அதிகரித்து, நேற்று ஒருநாள் பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நாட்டில் கரோனா பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, மக்கள் பொது இடங்களில் கூடியது, பாதிப்பு அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT