முகப்பு
உலகம்

உலகின் பல பகுதிகளில் கரோனா பாதிப்பு இருந்தது: சீன அரசு

உலகின் பல பகுதிகளில் கரோனா பாதிப்பு இருந்ததாகவும், எனினும் சீனாவே கரோனா குறித்து உலகிற்கு முதலில் தகவலைப் பரிமாறியதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது. 

Updated On : 10 அக்டோபர், 2020 at 6:39 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:05 PM

உலகின் பல பகுதிகளில் கரோனா பாதிப்பு இருந்ததாகவும், எனினும் சீனாவே கரோனா குறித்து உலகிற்கு முதலில் தகவலைப் பரிமாறியதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது. 

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உலகின் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா தொற்று பரவியுள்ள நிலையில் சீன நாட்டின் வூஹான் மாகாணத்தில் முதன்முதலில் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பும் சீன அரசு திட்டமிட்டு கரோனா வைரஸைப் பரப்பியுள்ளதாக தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் சீன அரசு புதியத் தகவலை தெரிவித்துள்ளது.

Advertisement

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், கொரோனா வைரஸ் புதிய வகை வைரஸ் என்றும் அது தொடர்பான பல உண்மைகள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்றும் கூறியுள்ளார்.

உலகின் பல பகுதிகளில் கரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாகவும், எனினும் சீன அரசு மட்டுமே முதன்முதலில் அதனை உலகத்திற்கு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் இதுவரை 3 கோடியே 71 லட்சத்து 76 ஆயிரத்து 40 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.