முகப்பு
உலகம்

வங்கதேசத்தில் புதிததாக 1600 பேருக்கு கரோனா; 15 பேர் பலி

வங்கதேசத்தில் புதிததாக 1600 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 15 அக்டோபர், 2020 at 4:33 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:08 PM

வங்கதேசத்தில் புதிததாக 1600 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் அண்டை நாடான வங்கதேசத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இங்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிததாக 1600 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,84,559ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து 1,780 குணமடைந்துள்ளது. 

இத்துடன் ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 2,99,229ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 14,104 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேசமயம் ஒட்டுமொத்தமாக இதுவரை 21,16,552 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் வைரஸுக்கு மேலும் 15 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement

இதனால் பலியானோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5,608 ஆக உயர்ந்துள்ளது. வங்கதேசத்தில் மார்ச் 8ஆம் தேதி முதல் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.