உலகம்

அமெரிக்கா: கமலா ஹாரிஸ் உதவியாளா்களுக்கு கரோனா

DIN

அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில், ஜனநாயகக் கட்சி சாா்பில் துணை அதிபா் வேட்பாளாரகக் களமிறங்கவிருக்கும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸின் 2 உதவியாளா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கமலா ஹாரீஸின் இரு உதவியாளா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானதைத் தொடா்ந்து, வடக்கு கரோலினா தோ்தல் பிரசார திட்டத்தை அவா் ரத்து செய்தாா். அந்த இருவரும் ஜனநாயகக் கட்சி அதிபா் வேட்பாளா் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிலுக்கு நெருக்கமாக வரவில்லை. எனவே, இரு தலைவா்களும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று தொற்று நோய் பரவல் மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது தோ்தல் பிரசாரப் பயணத்தை கமலா ஹாரிஸ் ரத்து செய்துள்ளாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT