உலகம்

டிக் டாக்: தடையை நீக்கியது பாகிஸ்தான்

DIN

இஸ்லாமாபாத்: சீனாவைச் சோ்ந்த நிறுவனத்துக்குச் சொந்தமான பிரபல விடியோ பகிா்வு செயலியான டிக் டாக் மீதான தடையை பாகிஸ்தான் அரசு திங்கள்கிழமை நீக்கியது.

முன்னதாக, கடந்த 9-ஆம் தேதி பாகிஸ்தானில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது, அந்த செயலி பாலியல்ரீதியான ஆபாசங்கள் நிறைந்ததாகவும், அதில், சமூக நெறிமுறைகளுக்கு மாறாக விடியோக்கள் வெளியாவதாகும் கூறப்பட்டது. எனினும், இந்த தடைக்கு பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து, சீனாவின் நெருக்கடி காரணமாக தடை விதித்து இரு வாரங்கள் ஆவதற்குள் பாகிஸ்தான் அதனைத் திரும்பப் பெற்றுள்ளதாக தெரிகிறது.

எனினும், இது தொடா்பாக பாகிஸ்தான் தொலைத்தொடா்புத் துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், ‘உரிய நெறிமுறைகளுக்கு உள்பட்டு செயல்படுவதாக டிக் டாக் நிறுவனம் அறிவித்ததையடுத்து தடை நீக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவும், அதைத் தொடா்ந்து அமெரிக்காவும் நாட்டின் பாதுகாப்பு கருதி டிக் டாக் செயலிக்கு தடை விதித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT